சாதிக்க வேண்டிய துறையை தேர்ந்தெடுக்க வேண்டும்


சாதிக்க வேண்டிய துறையை தேர்ந்தெடுக்க வேண்டும்
x

சாதிக்க வேண்டிய துறையை தேர்ந்தெடுக்க வேண்டும்

திருவாரூர்

உயர்கல்வியில் படிக்கும் மாணவர்கள் சாதிக்க வேண்டிய துறையை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.

உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி

திருவாரூர் திரு.வி.க. அரசு கலைக்கல்லூரியில் உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தலைமை தாங்கி பேசுகையில், உயர்கல்வியில் படிக்கும் மாணவர்கள் சாதிக்க வேண்டிய துறையை தேர்ந்தெடுக்க வேண்டும். முந்தைய காலத்தினை விட தற்போதைய காலத்தில் பள்ளி படிப்பிற்கு பிறகு, கல்லூரி படிப்பு பயில பல்வேறு பாடப்பிரிவுகள் உள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் பல்வேறு இளநிலை, முதுநிலை பாடப்பிரிவுகள் உள்ளன. அதனை மாணவ, மாணவிகள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

முயற்சி மேற்கொள்ள வேண்டும்

போட்டித்தேர்வுகளில் வெற்றி பெற நமக்கு அடிப்படையானது கல்லூரி படிப்பே. இந்த வாய்ப்பினை நாம் முறையாக பயன்படுத்தி வாழ்வில் முன்னேறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக பல்நோக்கு அரங்கில் நடைபெற்ற மாணவர்களுக்கான வழிகாட்டி நிகழ்ச்சியில் கலெக்டர் சாருஸ்ரீ கலந்துகொண்டார். இதில் வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலஅலுவலர் விஜயன், தனி தாசில்தார் பத்மா, திரு.வி.க. அரசு கல்லூரி விலங்கியல் துறைத்தலைவர் ராஜாராமன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.


Next Story