கிறிஸ்தவ கிராம நல கூட்டமைப்பினர் அமைதி ஊர்வலம்


கிறிஸ்தவ கிராம நல கூட்டமைப்பினர் அமைதி ஊர்வலம்
x
தினத்தந்தி 31 July 2023 12:15 AM IST (Updated: 31 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மணிப்பூர் வன்முறையை கண்டித்து கிறிஸ்தவ கிராம நல கூட்டமைப்பினர் அமைதி ஊர்வலம் நடந்தது

மயிலாடுதுறை

பொறையாறு:

மணிப்பூரில் நடைப்பெற்று வரும் வன்முறையை கண்டித்து, பொறையாறு அருகே எடுத்துக்கட்டி சாத்தனூரில் கிறிஸ்தவ கிராம நல கூட்டமைப்பின் சார்பில் அமைதி ஊர்வலம் நடந்தது. எடுத்துக்கட்டி சாத்தனூர் பஸ் நிறுத்தம் அருகே தொடங்கிய ஊர்வலத்துக்கு கத்தோலிக்க திருச்சபையின் தரங்கம்பாடி பங்குதந்தை அருளானந்து தலைமை தாங்கினார்.கிறிஸ்தவ கிராம நல கூட்டமைப்பின் கிராம நாட்டாண்மை, கிராம பஞ்சாயத்துக்கள் முன்னிலை வகித்தனர். கூட்டமைப்பின் சார்பில் பால்ராஜ் வரவேற்றார். ஊர்வலத்தில் எடுத்துக்கட்டி, பாலூர், மாங்குடி, பெரியகூத்தூர், சிதம்பரம், கோவில்பத்து, திருக்களாச்சேரி, காரம்பள்ளம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கண்டனங்கள் மற்றும் கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்திச்சென்றனர். தொடர்ந்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தரங்கம்பாடி டி.இ.எல்.சி. புதிய எருசலேம் ஆலய ஆயர் சாம்சன் மோசஸ், தென்னிந்திய திருச்சபை ஆயர் தங்கத்துரை, முன்னாள் எம்.எல்.ஏ. சித்திக், தி.மு.க.ஒன்றிய செயலாளர் அப்துல்மாலிக், எடுத்துக்கட்டி ஊராட்சி தலைவர் பைலட், முன்னாள் ஊராட்சி தலைவர் உதயக்குமார், ஆயப்பாடி ஜமாத் சார்பில் நூருல்லா, தூய தெரசா மகளிர் கல்லூரியின் முதல்வர் காமராசர், அருட்சகோதரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர். முடிவில் கூட்டமைப்பின் சார்பில் ரோமியோ நன்றி கூறினார்.


Next Story