வேளாங்கண்ணிக்கு கிறிஸ்தவர்கள் பாதயாத்திரை
மாதா சொரூபம் தாங்கிய தேருடன் வேளாங்கண்ணிக்கு கிறிஸ்தவர்கள் பாதயாத்திரையாக புறப்பட்டனர்.
கடலூர்
ஸ்ரீமுஷ்ணம்
கும்பகோணம் மறைமாவட்டம், அரியலூர் மாவட்டம், வரதராஜன் பேட்டையில் இருந்து வேளாங்கண்ணி மாதா சொரூபம் தாங்கிய தேருடன், ஜெபக்குழு உறுப்பினர்கள், இறை மக்கள் வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரை புறப்பட்டனர். முன்னதாக பங்குத்தந்தை அருட்பணி பெலிக்ஸ் சாமுவேல், உதவி பங்கு தந்தை அருட்பணி வில்லியம் ஆகியோர் தேரை அர்ச்சித்து, புனிதப்படுத்தி தொடங்கி வைத்தனர்.
இதையடுத்து கிறிஸ்தவர்கள் ஜெபித்துக்கொண்டும், கனிவாக பாடல்கள் பாடிக்கொண்டும் நடைப்பயணம் புறப்பட்டனர். இந்த நடைபயண குழுவினர் கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்துக்கு வந்தனர். அவர்களை சாலையோரம் ஏராளமான மக்கள் திரண்டு நின்று வேடிக்கை பார்த்தனர். பின்னர் இந்த குழுவினர் சோழத்தரம், மீன்சுருட்டி, திருப்பனந்தாள், ஆடுதுறை, வடகரை, திருவாரூர், நாகப்பட்டினம் வழியாக வேளாங்கண்ணியை சென்று அடைகின்றனர்.
Related Tags :
Next Story