கிறிஸ்தவர்கள் ஆர்ப்பாட்டம்
திருவிடைமருதூர் தபால் நிலையம் முன்பு கிறிஸ்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர்
திருவிடைமருதூர்:
கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் தபால் நிலையம் முன்பு நேற்று காலை மத்திய அரசு, கிறிஸ்தவர்களின் உரிமையை மறுப்பதை கண்டித்து கும்பகோணம் மறை மாவட்ட அனைத்து பங்குகளின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கும்பகோணம் மறை மாவட்ட முதன்மை குரு அமிர்தசாமி தலைமை தாங்கினார்.. அரசு தலைமை கொறடா கோவி. செழியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில குழு உறுப்பினர் ஜெயசீலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கும்பகோணம் மறை மாவட்ட அனைத்து பங்குகளின் சார்பில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
Related Tags :
Next Story