கிறிஸ்துமஸ் கேரல்ஸ் பவனி
கோத்தகிரியில் கிறிஸ்துமஸ் கேரல்ஸ் பவனி நடந்தது.
கோத்தகிரி,
இயேசு கிறிஸ்து பிறந்த தினமான கிறிஸ்துமஸ் பண்டிகை ஆண்டுதோறும் டிசம்பர் 25-ந் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. டிசம்பர் மாதம் கடும் குளிர் மற்றும் பனியிலும் ஊட்டி, கேத்தி, சாந்தூர், கோத்தகிரி தாந்தநாடு உள்பட பல்வேறு பகுதிகளில் கிறிஸ்தவ பாடல் மற்றும் இசையுடன் கேரல் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பு பல்வேறு திருச்சபைகள் சார்பில், கிறிஸ்வர்கள் குழுக்களாக சேர்ந்து கிறிஸ்துமஸ் தாத்தா ஊர்வலமாக சென்று பங்கு மக்களின் வீடுகளில் உள்ளவர்களை சந்தித்து, கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் கோத்தகிரியில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் கிறிஸ்துமஸ் தாத்தா ஊர்வலம் நேற்று முன்தினம் இரவில் நடந்தது. இதில் பாடல்களை பாடியபடி, கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில் பங்கு தந்தைகள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.