வால்பாறையில் கிறிஸ்துமஸ் கேரல்ஸ் பவனி தொடங்கியது
வால்பாறையில் கிறிஸ்துமஸ் பண்டிகை களை கட்டியதோடு, கேரல்ஸ் பவனி தொடங்கி உள்ளது.
வால்பாறை
வால்பாறையில் கிறிஸ்துமஸ் பண்டிகை களை கட்டியதோடு, கேரல்ஸ் பவனி தொடங்கி உள்ளது.
கிறிஸ்துமஸ் கேரல்ஸ் பவனி
இயேசு கிறிஸ்து பிறப்பை கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடி வருகிறார்கள். அதன்படி வருகிற 25-ந்தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாப்பட உள்ளது. தற்போது வால்பாறையில் கிறிஸ்துமஸ் பண்டிகை களை கட்ட தொடங்கி உள்ளது. வால்பாறை பகுதியில் உள்ள அனைத்து திருச்சபைகளின் கிறிஸ்துவர்கள் தங்களது தேவாலயங்களில் உறுப்பினர்களாக உள்ளவர்களின் வீடுகள் மற்றும் அனைத்து மக்களின் வீடுகளில் உள்ளவர்களுக்கும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்துமஸ் பாடல்கள் பாடி கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் கூறும் கிறிஸ்துமஸ் கேரல்ஸ் பவனியை மேற்கொண்டு வருகின்றனர்.
வால்பாறை தூய இருதய ஆலய பங்கு குருக்கள் ஜெகன் ஆண்டனி, இம்மானுவேல் தலைமையில் ஆலய பங்கு கிறிஸ்துமஸ் கேரல்ஸ் குழுவினர் கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து கொட்டும் பனியில் ஒவ்வொரு வீடாக சென்று கிறிஸ்துமஸ் வாழ்த்து கீதங்கள் இசைத்து ஆடிப்பாடி இனிப்புகள் வழங்கி கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை கூறிவருகின்றனர்.
கீதங்கள் இசைத்து வாழ்த்துகள்
இதேபோல் முடீஸ் புனித அந்தோனியார் ஆலய பங்கு குரு மரிய அந்தோணிசாமி தலைமையிலும், சோலையாறு நகர் புனித சூசையப்பர் ஆலய பங்கு குரு ஜார்ஜ் சகாயராஜ் தலைமையிலும், அய்யர்பாடி புனித வனத்துச்சின்னப்பர் ஆலய பங்கு குரு ஆனந்த குமார் தலைமையிலும் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸ் கேரல்ஸ் பவனியை மேற்கொண்டு வருகின்றனர்.
வால்பாறை சி.எஸ்.ஐ தேவாலய ஆயர்கள் சுந்தர்சிங், ஜான்வெஸ்லி ஆகியோர் தலைமையிலும் கிறிஸ்துமஸ் கேரல்ஸ் பவனியை மேற்கொண்டு வருகின்றனர். வால்பாறை சுற்று வட்டார பகுதியில் உள்ள அனைத்து சி.எஸ்.ஐ தேவாலயங்களின் கேரல்ஸ் குழுவினர் கிறிஸ்துமஸ் பாடல்கள், கீதங்கள் இசைத்து வாழ்த்துகள் கூறினார்கள்.