கிறிஸ்துமஸ் விழா


கிறிஸ்துமஸ் விழா
x

அடைக்கல மாதா தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏலாக்குறிச்சி கிராமத்தில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா தலமான அடைக்கல மாதா தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி தேவாலயம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, இயேசு பிறக்கும் மாட்டுக்கொட்டகை குடிலாக மக்களை கவரும் வண்ணம் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த கிறிஸ்துமஸ் திருவிழாவில் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து திரளான கிருஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர். இரவு 12 மணி அளவில் ஆலயத்தின் பங்குதந்தை தங்கசாமி மற்றும் உதவி பங்குத்தந்தை ஞானஅருள்தாஸ் ஆகியோர் ஒன்றிணைந்து சிறப்பு திருப்பலி நடத்தி இயேசு பிறப்பை கொண்டாடி மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டு, ஆசி வழங்கினர்.

1 More update

Next Story