கிணத்துக்கடவு அருகே சூலக்கல் மாரியம்மன் கோவில் தேரோட்டம் -வருகிற 8-ந்தேதி தொடங்குகிறது


கிணத்துக்கடவு அருகே சூலக்கல் மாரியம்மன் கோவில் தேரோட்டம் -வருகிற 8-ந்தேதி தொடங்குகிறது
x
தினத்தந்தி 2 May 2023 12:15 AM IST (Updated: 2 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கிணத்துக்கடவு அருகே சூலக்கல் மாரியம்மன் கோவில் தேரோட்டம் வருகிற 8-ந்தேதி தொடங்குகிறது.

கோயம்புத்தூர்

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு அருகே சூலக்கல் மாரியம்மன் கோவில் தேரோட்டம் வருகிற 8-ந்தேதி தொடங்குகிறது.

சூலக்கல் மாரியம்மன்

கிணத்துக்கடவு அருகே சூலக்கல் கிராமத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தமிழகத்தில் பல பகுதிகளில் இருந்தும், கேரள மாநிலத்தில் இருந்தும் அதிக பக்தர்கள் வருவது வழக்கம். இந்த கோவிலில் ஆண்டுதோறும் தேர் திருவிழா 3 நாட்கள் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டிற்கான தேர் திருவிழா வருகிற 8-ந்தேதி காலை முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது. 9-ந் தேதி காலை வேல் புறப்பாடு நிகழ்ச்சியும், இரவு பூச்சாட்டு விழாவும் நடைபெறுகிறது.

15-ந்தேதி இரவு கிராம சாந்தி, வாஸ்து சாந்தி பூஜை நடைபெறுகிறது. 16-ந் தேதி இரவு கம்பம் நடும் நிகழ்ச்சியும், பூவோடு எடுத்தல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 17-ந் தேதி காலை யாகசாலை ஆரம்பம் அதனைத் தொடர்ந்து கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இரவு மாரியம்மன் சிம்ம வாகனத்தில் திருவீதி உலா விழா நடைபெறுகிறது.

3 நாட்கள் தேரோட்டம்

18-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை மாரியம்மன் பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெறுகிறது. 24-ந் தேதி காலை 6 மணிக்கு பக்தர்கள் மாரியம்மனுக்கு மாவிளக்கு எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். அதனைத் தொடர்ந்து பொங்கல் விழாவும் நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு மாரியம்மனுக்கு திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 25-ந் தேதி காலை 5 மணிக்கு மாரியம்மன், திருத்தேர்க்கு புறப்படும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மாலை 4.30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 26-ந் தேதி 2-ம் நாள் தேர் திருவிழாவும், 27-ந் தேதி 3-ம் நாள் தேர் திருவிழாவும் நடக்கிறது. அதனைத் தொடர்ந்து 28-ந் தேதி பகல் 12 மணிக்கு மாரியம்மனுக்கு மகாபிஷேகத்துடன் தேர்த்திருவிழா நிறைவு பெறுகிறது. இதற்கானஏற்பாடுகளை சூலக்கல் மாரியம்மன் கோவில் செயல் அலுவலர் ப.கந்தசாமி மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகிறார்கள்.


Next Story