ஈஸ்டர் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடிய கிறிஸ்தவர்கள்


ஈஸ்டர் பண்டிகையை  உற்சாகமாக கொண்டாடிய கிறிஸ்தவர்கள்
x

இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாளில் கொண்டாடப்படும் ஈஸ்டர் பண்டிகையை உடுமலை பகுதி தேவாலயங்களில் கிறிஸ்தவர்கள் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

திருப்பூர்

இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாளில் கொண்டாடப்படும் ஈஸ்டர் பண்டிகையை உடுமலை பகுதி தேவாலயங்களில் கிறிஸ்தவர்கள் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

உயிர்த்தெழுந்தார்

இயேசு கிறிஸ்து கல்வாரி மலையில் முள் கிரீடம் சூட்டப்பட்டு சித்திரவதைகள் செய்யப்பட்டு சிலுவையில் அறையப்பட்டார். குற்றம் எதுவும் செய்யாமல் மக்களின் சகல பாவங்களையும் கழுவும் வகையில் ரத்தம் சிந்தி மரித்த இயேசுபிரான், கல்லறையிலிருந்து 3-ம் நாளில் உயிர்த்தெழுந்தார்.

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாள் புனித வெள்ளியாக கடைபிடிக்கப்படுகிறது. அவர் உயிர்த்தெழுந்த நாளை ஈஸ்டர் பண்டிகையாக கிறிஸ்தவர்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்த நாளில் ஒருவரை ஒருவர் சந்தித்து இயேசு உயிர்தெழுந்ததின் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்கிறார்கள். ஒவ்வொருவரும் இயேசுவின் நாமத்தினால் சகல பாவங்களையும் கழுவி தங்களுக்குள் உயிர்த்தெழுவதாக நம்பிக்கை உள்ளது.

ஆராதனை

அந்தவகையில் உடுமலை இம்மானுவேல் ஆலயத்தில் இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த திருநாளான ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்டது. கிறிஸ்தவ ஆலயத்தில் ஆயர் மேரி செல்வராணி காலை 4.30 மணிக்கு நடைபெற்ற முதலாம் ஆராதனையையும், ஆயர் லூத் காலை 8.30 மணிக்கு நடைபெற்ற இரண்டாம் ஆராதனையும் நடத்தினர். அப்போது சபை மக்களிடம் இயேசு கிறிஸ்துவின் பிறப்பின் நற்செய்தியை கூறினார்கள்.

இந்த ஆராதனை விழாக்களில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தித்தனர். மேலும் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களை கூறி மகிழ்ந்தனர். இதுபோல உடுமலை பழனி மெயின் ரோட்டில் உள்ள கிறிஸ்தவ நாதர் ஆலயத்தில் ஆயர் செல்வராஜ் கிறிஸ்து பிறப்பு ஆராதனையை நடத்தினார். மேலும் பள்ளபாளையம், புக்குளம் பகுதிகளிலுள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் ஈஸ்டர் பண்டிகை ஆராதனை நடைபெற்றது. இதில் திரளானவர்கள் கலந்துகொண்டனர்.


Related Tags :
Next Story