புனித ஆரோக்கிய அன்னை ஆலய தேர் பவனி


புனித ஆரோக்கிய அன்னை ஆலய தேர் பவனி
x
தினத்தந்தி 20 Feb 2023 12:30 AM IST (Updated: 20 Feb 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

புனித ஆரோக்கிய அன்னை ஆலய தேர் பவனி நடந்தது.

நாகப்பட்டினம்

நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில் புனித ஆரோக்கிய அன்னை ஆலய தேர் பவனி திருவிழா நடைபெற்றது. இங்கு ஆண்டு திருவிழா கடந்த 17-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி ஆலயத்தில் சிறப்பு கூட்டுத்திருப்பலி நடைபெற்றது. பங்கு தந்தை ஜான் கென்னடி கூட்டுத்திருப்பலியை நடத்தி வைத்தார். அதனைத் தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட ஆரோக்கிய அன்னை தேர்பவனி நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Next Story