சினிமா தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரனுக்கு ரூ.1 லட்சம் அபராதம்


சினிமா தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரனுக்கு ரூ.1 லட்சம் அபராதம்
x

சினிமா தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரனுக்கு ரூ.1 லட்சம் அபராதம் -ஐகோர்ட்டு உத்தரவு.

சென்னை,

பிரபல சினிமா தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன். இவர், 2 படங்களை தயாரிக்க இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 97 கோடி ரூபாய் கடன் வாங்கியிருந்தார்.

இந்த சினிமா படங்களை வங்கிக்கு தகவல் தெரிவிக்காமல் விற்பனை செய்ததாகவும், இந்த 2 படங்களும் சரியாக ஓடவில்லை என்றும் கூறப்படுகிறது. இதையடுத்து, கடனை திருப்பி செலுத்த முடியாத நிலை அவருக்கு ஏற்பட்டது.

கடன் திரும்ப வராததால், அவரது சொத்தை ஏலம் விட வங்கி நிர்வாகம் முடிவு செய்து அறிவிப்பு வெளியிட்டது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் அவர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி என்.மாலா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வங்கித் தரப்பில் ஆஜரான வக்கீல் பெஞ்ஜமின் ஜார்ஜ் ஆஜராகி, மனுதாரருக்கு பல முறை வாய்ப்பு கொடுத்தும் அவர் பணத்தை செலுத்தவில்லை. ஐகோர்ட்டை தவறாக பயன்படுத்துகிறார் என்று வாதிட்டார்.

இதையடுத்து நீதிபதிகள், ''ஏலம் தேதி ஏற்கனவே முடிந்து விட்டதால், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல. மேலும், மனுதாரர் ஆஸ்கார் ரவிச்சந்திரன், இந்த ஐகோர்ட்டை தவறாக பயன்படுத்தியதற்காக அவருக்கு ரூ.1 லட்சம் வழக்கு செலவு (அபராதம்) விதிக்கிறோம்'' என்று உத்தரவிட்டு உள்ளனர்.


Next Story