திருப்பத்தூர் அருகே கண்மாயில்வரலாற்றுக்கால வட்டக்கல், முதுமக்கள் தாழி கண்டெடுப்பு


திருப்பத்தூர் அருகே கண்மாயில்வரலாற்றுக்கால வட்டக்கல், முதுமக்கள் தாழி கண்டெடுப்பு
x
தினத்தந்தி 11 April 2023 12:15 AM IST (Updated: 11 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூர் அருகே ஒலைக்குடிபட்டி கண்மாய் பகுதியில் வரலாற்றுக்கால வட்டக்கல் மற்றும் முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டது.

சிவகங்கை

திருப்பத்தூர்

திருப்பத்தூர் அருகே ஒலைக்குடிபட்டி கண்மாய் பகுதியில் வரலாற்றுக்கால வட்டக்கல் மற்றும் முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டது.

கள மேற்பரப்பு ஆய்வு

திருப்பத்தூர் அருகே ஒலைக்குடிபட்டி கண்மாய் பகுதியில் ஆறுமுகம்பிள்ளை சீதையம்மாள் கல்லூரி வரலாற்றுத்துறைத் தலைவர் தனலெட்சுமி, பேராசிரியர்கள் வேல்முருகன், சஞ்சீவி, சிவச்சந்திரன், மற்றும் மாணவர்கள் 2-ம் ஆண்டு கல்லூரி மாணவன் அபினேஷ் அளித்த தகவலின் பேரில் அப்பகுதியி்ல் கள மேற்பரப்பு ஆய்வு மேற்கொண்டனர்.அங்கு சுமார் 25-க்கும் மேற்பட்ட வட்டக்கல் அமைப்பும் நூற்றுக்கும் மேற்பட்ட சேதமடைந்த சிறிய மற்றும் பெரிய வடிவிலான ஈமத்தாழிகள் எனப்படும் முதுமக்கள் தாழி இருப்பது கண்டெடுக்கப்பட்டது.

கி.மு.3-ம் நூற்றாண்டு

அதன் தன்மையைக் கண்டறிய மேலோட்டமாகத் தோண்டிப் பார்த்தபோது பெரிய அளவிலான முதுமக்கள்தாழிகள் மற்றும் அடியில் முன்னோர்கள் பயன்படுத்திய பல வகையான மண்பாண்ட பாகங்கள் கிடைத்துள்ளன.. கிண்ணம், தட்டு, உடைந்த குடிநீர்குவளை, சிறிய மண் கலயங்கள், போன்ற பாகங்கள் பயன்படுத்தப்பட்ட காலங்கள் கி.மு.3-ம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. இந்த கள ஆய்வின்போது குன்றக்குடி கிராம நிர்வாக அலுவலரும் தொல்லியல் ஆர்வலருமான குணசேகரன் உடனிருந்தார்.


Next Story