கிறிஸ்தவ சபை கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்


கிறிஸ்தவ சபை கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
x

மணிப்பூர் மாநில கலவரத்தை கண்டித்து கிறிஸ்தவ சபை கூட்டமைப்பு சார்பில் தாராபுரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருப்பூர்

மணிப்பூர் மாநில கலவரத்தை கண்டித்து கிறிஸ்தவ சபை கூட்டமைப்பு சார்பில் தாராபுரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டம்

மணிப்பூர் மாநில வன்முறையை கண்டித்து திருப்பூர் தெற்கு மாவட்ட கிறிஸ்தவ சபை கூட்டமைப்பு சார்பில் தாராபுரம் அண்ணா சிலை அருகில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மதப்போதகர்கள், நகராட்சி தலைவர் பாப்பு கண்ணன், தி.மு.க. அவை தலைவர் கதிரவன், நகரத் துணை செயலாளர் கமலக்கண்ணன், நகர மன்ற உறுப்பினர் செல்வி பிலோமினா உள்பட ஆயிரத்துக்கு மேற்பட்ட கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

ஆர்பாட்டத்தின் போது மணிப்பூர் மாநிலத்தில் கலவரத்தை கட்டுப்படுத்த தவறிய பா.ஜனதா அரசு பதவி பதவி விலக வேண்டும் என்றும், அங்குள்ள கிறிஸ்துவ ஆலயங்கள் மற்றும் மசூதிகள் உள்ளிட்ட ஏராளமான ஆலயங்களை தீயிட்டு கொளுத்தி இடித்து தள்ளி தரமட்டமாக்கியதாவும், இது போன்ற வன்முறைகளால் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம் சாட்டினர்.

தேவாலயங்களை கட்டித்தர வேண்டும்

மேலும் இடிக்கப்பட்ட மசூதி மற்றும் தேவாலயங்களை உடனடியாக கட்டி தர வேண்டும். வன்முறைகள் இந்தியாவில் நடக்காமல் இருக்க பிரதமர் உத்தரவாதம் அளிக்க வேண்டும். வரும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா அரசை மீண்டும் சிம்மாசனத்தில் அமராமல் இருக்க சிறுபான்மை மக்களாகிய முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் தங்களுடைய வாக்குகளை சிதறாமல் வாக்களித்து மோடி அரசு அப்புறப்படுத்த வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் கோஷமிட்டனர்.


Related Tags :
Next Story