பொதுமக்கள் திடீர் சாலை மறியல்


பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
x

ஆற்காடு அருகே சுடுகாடு ஆக்கிரமிப்பை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர்.

ராணிப்பேட்டை

சாலை மறியல்

ஆற்காடு அடுத்த கத்தியவாடி கிராமத்தில் உள்ள ஒரு சமூகத்தினர் தங்களுக்கான சுடுகாட்டை பல ஆண்டுகளாக பயன்படுத்தி வருகின்றனர். அதில் சிலர் கல்லறைகள் கட்டியுள்ளனர். அப்பகுதியில் அதே கிராமத்தை சேர்ந்த தனிநபருக்கு சொந்தமான நிலம் உள்ளது. இந்தநிலையில் நிலத்தின் உரிைமயாளர்கள் சுடுகாட்டின் ஒரு பகுதி தங்கள் பட்டா நிலம் என்று கூறி பொக்லைன் எந்திரம் மூலம் கட்டுமான பணிக்காக பள்ளம் தோண்டியுள்ளனர்.

இது பற்றி தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் சுடுகாடு செல்லும் சாலையின் அருகே ஆற்காட்டில் இருந்து அருங்குன்றம் செல்லும் சாலையில் அமர்ந்து தங்களுக்குக்கான சுடுகாட்டை அக்கிரமிப்பு செய்வதாக கூறி திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து பாதிப்பு

இது குறித்து தகவல் அறிந்த ஆற்காடு டவுன் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்கள் தமிழ்செல்வி, அமரேசன் மற்றும் போலீசார், வாலாஜா தாசில்தார் வெங்கசேடன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பேச்சு வார்த்தை நடத்தி பிரச்சினைக்குரிய பகுதி ஆவணங்களின் அடிப்படையில் நில அளவையர் மூலம் அளந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர்.

அதைத் தொடர்ந்து மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


Next Story