பொதுமக்கள் திடீர் சாலை மறியல்


பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
x

போதையில் ரகளையில் ஈடுபட்டவர்களை கைது செய்யக்கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ராணிப்பேட்டை

பனப்பாக்கத்தை அடுத்த நெடும்புலி கடை வீதியில் பொதுமக்கள் மாலை நேரங்களில் அதிகமாக வந்துசெல்கின்றனர். இந்தநிலையில் நேற்று கடை வீதியில் அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் போதையில் பொதுமக்களிடம் ரகளையில் ஈடுபட்டு அவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் போதையில் ரகளையில் ஈடுபட்ட அடையாளம் தெரியாத நபர்களை கைது செய்யக்கோரி ஓச்சேரி-அரக்கோணம் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்ததும் நெமிலி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

1 More update

Next Story