பொதுமக்கள் திடீர் சாலை மறியல்


பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
x

திருவட்டார் அருகே பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

கன்னியாகுமரி

திருவட்டார்,

திருவட்டார் அருகே சாத்திரவிளை - கொக்கோட்டு மூலை இணைப்பு சாலை உள்ளது. சாத்திரவிளை அருகே தனிநபர் ஒருவர் சாலை அமைந்துள்ள பகுதியை சொந்தம் கொண்டாடி வந்துள்ளார். அவர் கடந்த வாரம் சாலையின் குறுக்கே சுவர் எழுப்பி அடைத்துள்ளார். இதுகுறித்து அந்த பகுதி மக்கள் திருவட்டார் பேரூராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தனர்.

இந்த நிலையில் நேற்று திருவட்டார் பேரூராட்சி செயல் அலுவலர் மகாராஜன், தலைவர் பெனிலா ரமேஷ் மற்றும் பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். அப்போது அந்த நபர், தான் கோர்ட்டு உத்தரவுபடிதான் தனது சொத்தில் சுவர் கட்டி உள்ளதாக கூறினார்.

இதற்கிைடயே பொதுமக்கள் அருமனை-குலசேகரம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து தடைபட்டது.

தகவல் அறிந்த தக்கலை துணை போலீஸ் சூப்பிரண்டு கணேசன், திருவட்டார் இன்ஸ்பெக்டர் ஷேக் அப்துல் காதர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அந்த நபர் தன்னிடம் கோர்ட்டு ஆர்டர் இருப்பதாக கூறினார். அத்துடன் மற்றொரு தரப்பினரும் தாங்கள் தடை ஆணை வைத்துள்ளதாக கூறினர்.

இதனால், அந்த பகுதியில் இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் நிலைமையை கட்டுப்படுத்த பொதுமக்களை கலைந்து செல்லும் படி போலீசார் எச்சரித்தனர். இறுதியில் முடிவு எதுவும் எட்டப்படாத நிலையில் பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

1 More update

Next Story