பொதுமக்கள் திடீர் சாலை மறியல்


பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
x

பணித்தள பொறுப்பாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்கக்கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

வேலூர்

கே.வி.குப்பத்தை அடுத்த கீழ்ஆலத்தூரில் 100 நாள் வேலை திட்டத்தில் தற்காலிகமாக பணிபுரிந்த பணித்தள பொறுப்பாளர்கள் 2 பேரை கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊராட்சி நிர்வாகம் பணிநீக்கம் செய்தது. அவர்களுக்கு மீண்டும் வேலை வழங்கவேண்டும் என்று கோரி, சுமார் 50 பேர் குடியாத்தம் - காட்பாடி தேசிய நெடுஞ்சாலையில் கீழ்ஆலத்தூர் பஸ் நிறுத்தம் அருகில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதுபற்றி. தகவல் அறிந்ததும் ஊராட்சி மன்ற தலைவர் வி.ஆர்.சுரேஷ், ஊராட்சி செயலாளர் சாமுவேல், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பெருமாள், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்வகுமார், சிவசந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.


Next Story