பொதுமக்கள் திடீர் சாலை மறியல்


பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
x

அரக்கோணத்தில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராணிப்பேட்டை

அரக்கோணம் - காஞ்சீபுரம் ரோட்டில் வின்டர்பேட்டை பஸ் நிறுத்தம் அருகே அப்பகுதி பொதுமக்கள் திடீரென சாலை பறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த டவுன் இன்ஸ்பெக்டர் சாலோமன் ராஜா அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது பொது மக்கள் கூறுகையில் அந்தப் பகுதியில் சமூக விரோதிகள் நடமாட்டம் இருப்பதாகவும், சமூக விரோத செயல்கள் நடைபெறுவதாகவும், அதனை தடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


Next Story