பொதுமக்கள் திடீர் சாலை மறியல்


பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
x

ஆற்காடு அருகே பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த வேப்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட கருமாரியம்மன் கோவில் தெரு பகுதியில் பொது கழிப்பிடம் உள்ளது. இந்த கழிப்பிடத்தில் கடந்த சில நாட்களாக தண்ணீர் வரவில்லை என கூறப்படுகிறது. மேலும் பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஒரு சில தெருக்களில் குடிநீர் சரியாக வரவில்லை என்றும் கூறப்படுகிறது. இது குறித்து தகவல் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் வேலூரில் இருந்து ஆற்காடு செல்லும் சாலையில் வேப்பூர் பஸ் நிறுத்தம் அருகே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த ஆற்காடு டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவே அனைவரும் கலைந்து சென்றனர். இந்த திடீர் சாலை மறியலால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


Next Story