வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியல்


வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
x

ஆரணி அருகே வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை

ஆரணி

ஆரணி அருகே வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஆக்கிரமிப்பு

ஆரணியை அடுத்த எஸ்.வி.நகரம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான கால்வாய் பகுதி அருகில் 3 வீடுகள் ஆக்கிரமிப்பில் இருந்து வந்துள்ளது.

இதையடுத்து பொதுப்பணித்துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி தொடர்ந்த வழக்கு ஐகோர்ட்டில் நீண்டகாலமாக இருந்து வந்தது.

இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டில் 3 வீடுகளையும் உடனடியாக அகற்றி அவர்களுக்கு வேறு இடத்தில் பட்டா வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதனால் ஆரணி தாசில்தார் ஆர்.ஜெகதீசன், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் ஆரணி தாலுகா போலீசாருடன் சென்று ஆக்கிரமிப்புகளை அகற்றி அவர்களுக்கு வேறு இடம் ஒதுக்கி பட்டா வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

சாலை மறியல்

இதையறிந்த அப்பகுதியில் ஏற்கனவே நீண்ட காலமாக குடியிருந்து வரும் பொதுமக்கள் அனைவரும் எங்களுக்கும் பட்டா வழங்கப்பட வேண்டும் எனக்கூறி ஆரணி - எஸ்.வி நகரம் சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆரணி தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஷாபுதீன் மற்றும் போலீசார் விரைந்து வந்து பொதுமக்களிடம் இதுசம்பந்தமாக தாசில்தாரிடம் கோரிக்கை மனு கொடுத்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறி சமாதானம் செய்தனர்.

இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

இந்த சம்பவத்தால் சுமார் 20 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


Next Story