காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்


காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
x

செங்கோட்டை அருகே காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தென்காசி

கடையநல்லூர்:

செங்கோட்டை அருகே காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சாலை மறியல்

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே சீவநல்லூர் ஊராட்சி பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 15 நாட்களாக குடிநீர் வழங்கப்படவில்லை எனவும், இதனால் அப்பகுதி மக்கள் சிரமத்திற்கு உள்ளாவதகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சீராக குடிநீர் வழங்க வலியுறுத்தி சுமார் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ெங்கோட்டை- இலத்தூர் செல்லும் சாலையில் காலிக்குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்த இலத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பொதுமக்கள் கூறுகையில், சீவநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சீராக குடிநீர் வழங்க வேண்டும். தலைவர், துணைத் தலைவர் தன்னிச்சையாக செயல்படுவதாகவும், கவுன்சிலர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் ஊராட்சி பகுதியில் எந்தவிதமான அத்தியாவசிய பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் குற்றம்சாட்டினார்கள். பின்னர் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

1 More update

Next Story