சி.ஐ.டி.யூ. கூட்டுறவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
சி.ஐ.டி.யூ. கூட்டுறவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
திருவாரூர்:
12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் சி.ஐ.டி.யூ. கூட்டுறவு ஊழியர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
12 அம்ச கோரிக்கைகள்
திருவாரூர் மாவட்டத்தில் பணி நிரந்தரம் செய்யப்படாத ஊழியர்களுக்கு பணி நிரந்தரம் செய்ய வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலைப்படியினை உடனடியாக வழங்க வேண்டும். ஊதிய உயர்வு வழங்க வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். 500-க்கும் மேற்பட்ட கார்டுகள் உள்ள கடைகளுக்கு உதவியாளர் பணியிடத்தை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யூ. கூட்டுறவு ஊழியர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர்.
ஆர்ப்பாட்டம்
அதன்படி திருவாரூர் கூட்டுறவு சங்க மண்டல இணை பதிவாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யூ. கூட்டுறவு ஊழியர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் செல்வராஜ் தலைமை தாங்கினார். இதில் சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் முருகையன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். இதில் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் செல்வம், மாவட்ட துணைத்தலைவர் ராஜேந்திரன், மாவட்ட குழு உறுப்பினர் குணசேகரன், மாவட்ட துணை செயலாளர் கலைவாணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.