சி.ஐ.டி.யு. ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


சி.ஐ.டி.யு. ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

சி.ஐ.டி.யு. ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

வேலூர்

சி.ஐ.டி.யு. ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

வேலூர் மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்கம் (சி.ஐ.டி.யு.) சார்பில் வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்க மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். சங்க மாவட்ட பொதுச்செயலாளர் முரளி, மாநகர பொறுப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, சி.ஐ.டி.யு. மாவட்ட பொதுச்செயலாளர் பரசுராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக சி.ஐ.டி.யு. மாவட்ட துணைத்தலைவர் காசி, பொருளாளர் ராமு, விவசாய சங்க மாவட்ட துணைத்தலைவர் நரசிம்மன் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினர்கள்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்த கொண்டவர்கள் மத்திய அரசு மோட்டார் வாகன தொழில்களை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரைவார்க்கும் போக்கினை கைவிட வேண்டும். புதிய மோட்டார் வாகன சட்டத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வினை வாபஸ் பெற வேண்டும். அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை, சி.எம்.சி. மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் செயல்படும் ஆட்டோ நிறுத்தங்களுக்கு முறையான அனுமதி வழங்கிட வேண்டும். புதிய பஸ் நிலையத்தில் அனைத்து ஆட்டோ தொழிலாளர்களும் பயன்படுத்தும் வகையில் பிரீபெய்டு முறையை ஏற்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதில், ஆட்டோ சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story