தூத்துக்குடியில் சி.ஐ.டி.யு.வினர் ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடியில் சி.ஐ.டி.யு.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் பேச்சிமுத்து தலைமை தாங்கினார். மாநில செயலாளர் ரசல் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். மாநில துணைத்தலைவர் கருப்பையன் கண்டன உரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவாகவும், தொழிலாளர்களுக்கு எதிராகவும் செயல்படுவதாக கூறி காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டரை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் சி.ஐ.டி.யு. மாவட்ட பொருளாளர் அப்பாதுரை, மாநிலக்குழு உறுப்பினர் கிருஷ்ணவேணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story