சி.ஐ.டி.யூ. மாவட்ட மாநாடு


சி.ஐ.டி.யூ. மாவட்ட மாநாடு
x

தேனியில் சி.ஐ.டி.யூ. மாவட்ட மாநாடு நடந்தது

தேனி

தேனியில் சி.ஐ.டி.யூ. மாவட்ட மாநாடு நடந்தது. மாவட்ட தலைவர் முருகன் தலைமை தாங்கினார். மாநாட்டை மாநிலக்குழு உறுப்பினர் சுப்பிரமணியன் தொடங்கி வைத்து பேசினார். மாநில பொதுச்செயலாளர் சுகுமாறன், மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டு பேசினர். மாநாட்டில் 37 பேர் கொண்ட மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட்டது. தேனிக்கு ரெயில் சேவை தொடங்கியதை தொடர்ந்து, சரக்கு போக்குவரத்துக்கு ரெயில்வே குட்செட் அமைக்க வேண்டும், டாஸ்மாக் ஊழியர்களுக்கு பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன


Next Story