சி.ஐ.டி.யு. மின்ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


சி.ஐ.டி.யு. மின்ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x

பாளையங்கோட்டையில் சி.ஐ.டி.யு. மின்ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி

பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் மின்வாரிய அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யு. மின்ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஊதிய உயர்வு, காலி பணியிடங்களை நிரப்புதல், வெளியாட்கள் மூலம் வேலை செய்வதை கைவிட வேண்டும், ஒப்பந்த தொழிலாளர் மற்றும் பகுதிநேர ஊழியர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்க கோட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். திட்ட செயலாளர் கந்தசாமி கோரிக்கைகளை விளக்கி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Next Story