சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் சார்பில் மே தின விழா


சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் சார்பில் மே தின விழா
x

நெமிலி, பனப்பாக்கம் பகுதிகளில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் சார்பில் மே தின விழா நடைபெற்றது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி, பனப்பாக்கம் பகுதிகளில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் சார்பில் மே தினவிழா நடைபெற்றது. நெமிலி பஸ் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சி.ஐ.டி.யு. துப்புரவு பணியாளர் சங்க தலைவர் சி.வெங்கடேசன் தலைமை தாங்கினார். பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் கிருஷ்ணன், டில்லி, தமிழ்வாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் ஆர்.வெங்கடேசன் கலந்துகொண்டு சங்க கொடியேற்றி பேசினார். பின்னர் தொழிலாளர்களுக்கு புதிய ஆடைகள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

இதில் முன்னாள் சங்க செயலாளர் ராஜமாணிக்கம், வழக்கறிஞர் அரிதாஸ், மன்றத்து ஜெயபால், குமார் மற்றும் பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

பனப்பாக்கம் பஸ் நிலையம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சி.ஐ.டி.யு. மாவட்ட குழு உறுப்பினர் சிவகுமார் கலந்துகொண்டு சங்க கொடியேற்றி பேசினார். இதில் சி.ஐ.டி.யு. ஆட்டோ தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.


Next Story