சி.ஐ.டி.யு. தோட்ட தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


சி.ஐ.டி.யு. தோட்ட தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 19 Aug 2022 1:45 AM IST (Updated: 19 Aug 2022 1:45 AM IST)
t-max-icont-min-icon

ஏற்காட்டில் தார்சாலை அமைத்து தரக்கோரி சி.ஐ.டி.யு. ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சேலம்

ஏற்காடு:-

ஏற்காட்டில் உள்ள கொட்டசேடு கிராமத்தில் இருந்து செந்திட்டு கிராமம் வரை தனியார் எஸ்டேட் வழியாக செல்லும் மண் சாலையை பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். அந்த சாலையை தனியார் எஸ்டேட் நிர்வாகம் பொதுமக்கள் பயன்படுத்த தடை விதித்தது. இதைத்தொடர்ந்து பொதுமக்கள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரித்த சேலம் கோர்ட்டு மண் சாலையை தார் சாலையாக மாற்ற எந்தவித தடையும் இல்லை என்று தீர்ப்பளித்தது. ஆனால் மாவட்ட நிர்வாகம் 2 ஆண்டுகளாகியும் அந்த சாலையை தார் சாலையாக மாற்றவில்லை. இதனால் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகிறார்கள். எனவே மண்சாலையை தார்சாலையாக மாற்றி அமைத்து தரக்கோரி சி.ஐ.டி.யு. தோட்ட தொழிலாளர் சங்கத்தினர் மற்றும் 18 கிராம மக்கள் என சுமார் 200 பேர் நேற்று ஏற்காடு பஸ் நிலையத்தில் இருந்து டவுன் வழியாக தாலுகா அலுவலகம் வரை ஊர்வலமாக சென்றனர். அங்கு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு சங்க மாவட்ட தலைவர் கண்ணாடிராஜ் தலைமை தாங்கினார். இதில் சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story