சி.ஐ.டி.யூ மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


சி.ஐ.டி.யூ மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 22 May 2023 12:15 AM IST (Updated: 22 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யூ மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யூ. தொழிற்சங்க மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு திட்ட பொருளாளர் கண்ணன் தலைமை தாங்கினார். கோட்ட செயலாளர் மணிமேகலன் முன்னிலை வகித்தார். இதில் இணை செயலாளர் குணசேகரன், திட்ட செயலாளர் கலைச்செல்வன், இணை திட் செயலாளர் சிவராஜன் உள்பட பலர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் மின்வாரியத்தில் கேங்மேகன் ஊதியம் உயர்ததி வழங்க வேண்டும், ஒப்பந்தமுறையில் பணியாற்றுபவர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும், பகுதிநேர ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ரைட்சோர்சிங் முறையை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் சி.ஐ.டி.யூ நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்கள், ஊழியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story