சி.ஐ.டி.யூ. தொழிற் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


சி.ஐ.டி.யூ. தொழிற் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

10அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாகையில் சி.ஐ.டி.யூ. தொழிற் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்

வெளிப்பாளையம்:

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக நாகை முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகம் முன்பு, சி.ஐ.டி.யூ. தொழிற் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நுகர்பொருள் வாணிப கழக பொதுத்தொழிலாளர் சங்க நாகை மண்டல தலைவர் தமிழரசன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் ஜெயராமன், நுகர்பொருள் வாணிப கழக பொது தொழிலாளர்கள் சங்க மண்டல நிர்வாகி ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுத்துறை நிறுவனங்களை தனியார் வசம் ஒப்படைக்கக்கூடாது., பருவ காலங்களில் பணிபுரியும் பணியாளர்களை நிரந்தரம் செய்யவேண்டும். கொள்முதலில் உள்ள குளறுபடிகளை களைந்திடவேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் நாகை மாலி எம்.எல்.ஏ., சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் தங்கமணி, நுகர்பொருள் வாணிபக்கழக பொதுத்தொழிலாளர் சங்க மண்டல செயலாளர் கார்த்திகேயன், சி.ஐ.டி.யூ. மாவட்டக்குழு உறுப்பினர்கள் குருசாமி, செல்வராஜ் மற்றும் சார்பு தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சங்கத்தைச் சேர்ந்த அன்பழகன் நன்றி கூறினார்.


Next Story