சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் உண்ணாவிரதம்
சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவெறும்பூர்:
திருவெறும்பூர் அருகே உள்ள பெல் நிறுவன வளாகத்தில் இயங்கி வரும் பள்ளி நிர்வாகத்தை கண்டித்து சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் பெல் பாய்லர் ஆலை மெயின் கேட் முன்பு நடந்தது. போராட்டத்திற்கு பெல் தொழிற்சாலை சி.ஐ.டி.யு. தொழிற்சங்க பொது செயலாளர் பிரபு தலைமை தாங்கினார். போராட்டத்தை தொழிற்சங்க புறநகர் மாவட்ட செயலாளர் சிவராஜன் தொடங்கி வைத்தார். பெல்நிர்வாகம் பள்ளிக்கு தொடர்ந்து மானியம் வழங்க வேண்டும். தற்போது பள்ளியில் வசூலிக்கப்படும் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். குழந்தைகளின் கற்கும் திறனை அதிகப்படுத்திட முழு நேர பள்ளியாக நடத்திட வேண்டும். நமஸ்தே, காயத்ரி மந்திரம் போன்ற கல்விக்கு தேவையில்லாதவற்றை உடனடியாக நிறுத்த வேண்டும். தமிழக மக்களின் கலாசாரத்தை, பண்பாட்டை சீரழிக்க கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்க நிர்வாகிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.