சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
வேடசந்தூரில் சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல்
சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கம் சார்பில், வேடசந்துர் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு கிளை தலைவர் பாலாஜி தலைமை தாங்கி பேசினார். ஓய்வுபெற்ற தொழிலாளர்கள் சங்க செயலாளர் வேலுச்சாமி முன்னிலை வகித்தார்.
மத்திய சங்க செயலாளர் நாகவேல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். கிளை தலைவர் ஸ்டீபன் வேளாங்கன்னி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்று பேசினார்கள். ஆர்ப்பாட்டத்தில் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட சலுகைகள் வழங்கவேண்டும். ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
Related Tags :
Next Story