சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
அரசு போக்குவரத்துக்கழக சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
விழுப்புரம்
விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழக தலைமை அலுவலகம் முன்பு நேற்று போக்குவரத்துக்கழக சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போக்குவரத்துக்கழகங்களில் காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும், போதுமான பணியாளர்களை நியமனம் செய்ய வேண்டும், ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளர்களை நியமிக்கும் முடிவை கைவிட வேண்டும், 8 மணி நேர வேலை உரிமையை பறித்து 12 மணி நேரமாக மாற்றும் தொழிற்சாலை சட்டத்திருத்தத்தை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மத்திய சங்க துணைத்தலைவர் குணசேகரன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் மூர்த்தி கண்டன உரையாற்றினார். இதில் மத்திய சங்க துணை பொதுச்செயலாளர் ஏழுமலை, பணிமனை செயலாளர் சாதிக்பாஷா, மத்திய சங்க துணைத்தலைவர் இளம்பாரதி, நிர்வாகிகள் ராமமூர்த்தி, கல்ராயன், ஷாஜகான், பாலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.