சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல்லில் சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திண்டுக்கல்
தமிழகத்தில் தொழிலாளர்களின் வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தும் வகையில் சட்டசபையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர், தொழிற்சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இந்த நிலையில் 12 மணி நேர வேலை முறை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கம் சார்பில் திண்டுக்கல் தலைமை தபால் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு மாவட்ட செயலாளர் பிரபாகரன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் கே.ஆர்.கணேசன் முன்னிலை வகித்தார். இதில் சங்க நிர்வாகிகள், தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். அப்போது 12 மணி நேர வேலை முறை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தியும் கோஷமிட்டனர்.
Related Tags :
Next Story