சி.ஐ.டி.யூ. போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


சி.ஐ.டி.யூ. போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

சி.ஐ.டி.யூ. போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விருதுநகர்

விருதுநகர் போக்குவரத்து கழக பணிமனை முன்பு போக்குவரத்து கழக சி.ஐ.டி.யூ.. தொழிற்சங்கத்தினர் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கான கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொழிற்சங்க கிளை செயலாளர் பாண்டியராஜ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை விளக்கி மத்திய சங்க பொருளாளர் கார்மேகம், ஓய்வு பெற்ற நல அமைப்பு நிர்வாகிகள் அசோகன், அழகர்சாமி உள்ளிட்டோர் பேசினர். இதில் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு பணப்பலன்களை உடனடியாக வழங்க கோரியும், ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை உடனே நடத்த வலியுறுத்தியும், தொழிலாளர்கள் மற்றும் ஓய்வு பெற்றோரின் கோரிக்கைகளுக்கு உடனடி தீர்வு காண வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


Next Story