சி.ஐ.டி.யு. நடைபயண குழுவிற்கு அறந்தாங்கியில் வரவேற்பு
சி.ஐ.டி.யு. நடைபயண குழுவிற்கு அறந்தாங்கியில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
அறந்தாங்கியில் உழைக்கும் மக்களின் உரிமை காக்க சி.ஐ.டி.யு.வினர் நடை பயணம் கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் தொடங்கி திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை வழியாக நேற்று முன்தினம் இரவு புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வந்தடைந்தது. நேற்று காலை அறந்தாங்கி பஸ் நிலையம், அம்மா உணவகம் அருகே நடைபயண குமுவினருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு சி.ஐ.டி.யு. புதுக்கோட்டை மாவட்ட துணை செயலாளர் நடராஜன் தலைமை தாங்கினார். ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் கருணா வரவேற்றார். கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினரும், விவசாய தொழிலாளர் சங்க மாநில தலைவரும், மார்க்சிஸ்ட் கட்சி மாநில குழு உறுப்பினருமாகிய சின்னதுரை கோரிக்கைகளை விளக்கி பேசினார். பின்னர் உழைக்கும் மக்களின் உரிமை காக்க நடைபயண குழுவை தொடங்கி வைத்தார். அறந்தாங்கி பஸ் நிலையம், கட்டுமாவடிசாலை முக்கம், காரைக்குடி- புதுக்கோட்டை சாலை, செக்போஸ்ட் முக்கம் ஆகிய இடங்களில் நடைபெற்ற நடைபயண பிரசாரத்தில், கலை குழுவினரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் சி.ஐ.டி.யு. நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் புதுக்கோட்டைக்கு நடைபயண குமுவினர் புறப்பட்டனர்.