சி.ஐ.டி.யூ. தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


சி.ஐ.டி.யூ. தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x

சி.ஐ.டி.யூ. தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருச்சி

கலெக்டர் அலுவலகம் அருகில் சி.ஐ.டி.யூ. ஆஷா திட்ட தொழிலாளர்கள் மாநகர் மாவட்ட குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநிலக்குழு உறுப்பினர் செல்வி தலைமை தாங்கினார். கோரிக்கைகளை விளக்கி சி.ஐ.டி.யூ. மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன், அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பால்பாண்டி, மாவட்ட செயலாளர் பழனிச்சாமி, ஆட்டோ சங்க மாவட்ட செயலாளர் மணிகண்டன், சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் சந்திரன், அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க மாவட்ட செயலாளர் சித்ரா, மாவட்ட பொருளாளர் ராணி ஆகியோர் பேசினர். இதில் திரளானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஆஷா திட்ட பணியாளர்களுக்கு குறைந்தபட்ச சம்பளம் ரூ.26 ஆயிரம் வழங்க வேண்டும். குறைந்தபட்ச சம்பளத்தை மாதா, மாதம் தவறாமல் வழங்க வேண்டும். பல ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் ஊழியர்களுக்கு வி.எச்.என். பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

1 More update

Next Story