சி.ஐ.டி.யு.சி. கண்டன ஆர்ப்பாட்டம்


சி.ஐ.டி.யு.சி. கண்டன ஆர்ப்பாட்டம்
x

விக்கிரமசிங்கபுரத்தில் சி.ஐ.டி.யு.சி. கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருநெல்வேலி

விக்கிரமசிங்கபுரம்:

விக்கிரமசிங்கபுரத்தில் சி.ஐ.டி.யு.சி. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒப்பந்த தூய்மை பணியாளர்களை நிரந்தர பணியாளர்களாக ஆக்க வேண்டும் என்று வலியுறுத்தி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஊரக உள்ளாட்சி தூய்மை பணியாளர் சங்க தலைவர் முருகன் தலைமை தாங்கினார். துணை தலைவர் ரவீந்திரன், துணை செயலாளர் சுடலையாண்டி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நகர குழு செயலாளர் இசக்கிராஜன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள் தர்மராஜ், ஆறுமுகம், ஜெயராஜ், மீனாட்சி, கிருஷ்ணம்மாள் உட்பட பலர் கலந்துகொண்டனர். பாலு நன்றி கூறினார்.


Next Story