கடையநல்லூர் நகரசபை கூட்டம்


கடையநல்லூர் நகரசபை கூட்டம்
x

கடையநல்லூர் நகரசபை கூட்டம் நடைபெற்றது

தென்காசி

அச்சன்புதூர்:

கடையநல்லூர் நகரசபை அவசர கூட்டம் அதன் தலைவர் ஹபிபுர் ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் ராசையா, ஆணையாளர் ரவிச்சந்திரன், சுகாதார அலுவலர் இளங்கோ நகரமைப்பு அலுவலர் காஜாமைதீன், உதவிப்பொறியாளர் ரவிச்சந்திரன், நகரமைப்பு ஆய்வாளர் கிருஷ்ணகுமார், நகராட்சி ஆய்வாளர் சக்திவேல், இளநிலை உதவியாளர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மொத்தம் 29 கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், கடையநல்லூர் நகராட்சியில் சொத்து வரி மற்றும் காலிமனை வரி பொது சீராய்வு தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள கடந்த கூட்டத்தில் அனுமதி பெறப்பட்டது. இதுகுறித்து எழுத்துப்பூர்வமாக ஆலோசனை ஆட்சேபனை நகராட்சியில் தெரிவிக்கலாம் என அறிவிப்பு செய்யப்பட்டது. நிர்ணயிக்கப்பட்ட காலம் வரை எந்தவித ஆட்சேபனைகள் மற்றும் ஆலோசனைகள் நகராட்சிக்கு வரப்பெறவில்லை. எனவே ஏற்கனவே மன்றம் அனுமதித்தபடி 25 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை சொத்துவரி சீராய்வு செய்து உயர்த்துவது, மேலும் ஆண்டுதோறும் 6 சதவீதம் சொத்து வரி உயர்வு செய்து அனுமதிக்கும் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

இதற்கு 3-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் சுபாராஜேந்திர பிரசாத் எதிர்ப்பு தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து அ.தி.மு.க., பா.ஜ.க. கவுன்சிலர்கள் 7 பேர் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.


Next Story