நகரசபை கூட்டம்


நகரசபை கூட்டம்
x

மழைகாலம் தொடங்கும் முன்பு பாதாள சாக்கடை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று மயிலாடுதுறை நகரசபை கூட்டத்தில் உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை நகரசபை கூட்டம் அதன் தலைவர் செல்வராஜ் தலைமையில் நடந்தது. ஆணையர் செல்வகணபதி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் உறுப்பினர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பேசியதாவது:-

ஜெயந்தி (அ.தி.மு.க.): தீப்பாய்ந்தாள் அம்மன் கோவில் பகுதியில் அமைந்துள்ள சுடுகாட்டை சீரமைக்க வேண்டும்.

தலைவர்: சுடுகாட்டை சீரமைக்க ரூ.20 லட்சத்திற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது.

கணேசன் (ம.தி.மு.க.): பாதாள சாக்கடை கழிவுநீர் சாலைகளில் வழிந்தோடுவதை தடுக்க வேண்டும்.

வடிகால்கள்

கல்யாணிரகு (தி.மு.க.): தெருக்களில் தினமும் அரை மணி நேரம் கூட குடிநீர் வினியோகம் செய்யப்படுவதில்லை. மழைகாலம் தொடங்கும் முன்பு வடிகால்களை சரிசெய்ய வேண்டும்.

ரமேஷ் (தி.மு.க.): மயிலாடுதுறையில் பிரசித்தி பெற்ற கடைமுக தீர்த்தவாரி அடுத்த மாதம் தொடங்க உள்ளதால் அப்பகுதியில் பாதாள சாக்கடை கழிவுநீர் வழிந்தோடுவதை தடுக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரிஷிகுமார் (தி.மு.க.): கடைமுக தீர்த்தவாரியின் போது தீர்த்தவாரி நடக்கும் இடமான நாலுகால் மண்டபம் பகுதியில் குப்பைகள் கொட்டப்பட்டு அசுத்தமாக காட்சி அளிக்கிறது.

ஆஸ்பத்திரி கழிவுகள்

மணிமேகலை (தி.மு.க.): அரசு ஆஸ்பத்திரி கழிவுகளை வாரம் 2 முறை சுத்தம் செய்ய வேண்டும்.

சம்பத் (தி.மு.க.) : மாப்படுகை சாலை காவிரி ஆற்றங்கரை சுடுகாட்டில் பழுதடைந்த மின் கம்பங்களை சீரமைக்க வேண்டும். ஹாஜியார் நகரில் குடிநீரில், பாதாள சாக்கடை கழிவு நீர் கலந்து வருகிறது.

ராஜலட்சுமி (தி.மு.க.): பாசிக்கடை தெருவில் மழைநீர் வடிகாலை சரி செய்ய வேண்டும். திருமஞ்சன வீதியில் உள்ள நடை பாலத்தை சீரமைக்க வேண்டும்.

சர்வோதயன் (தி.மு.க.) : எனது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் குப்பை சேகரிக்கப்படுவதில்லை.

பாதாள சாக்கடை

கீதா(தி.மு.க.) : எனது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் ஈமக்கிரியை மண்டபம் அமைத்து தர வேண்டும்.

உஷாராணி (தி.மு.க.): ெரயில்வே பாதையில் கோழி கழிவுகள் கொட்டுவது தடுக்கப்பட வேண்டும். மழைக்காலம் தொடங்கும் முன்னர் பாதாள சாக்கடை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.

சதீஷ்குமார்(அ.தி.மு.க): பொதுமக்கள், கலெக்டர் அலுவலகம் சென்றுவர ஏதுவாக மாயூரநாதர் வடக்கு வீதியில் பஸ் நிறுத்தம் அமைக்க வேண்டும்.

வளர்மதி (தி.மு.க.): கலைஞர் காலனியில் உள்ள சாலையை சீரமைக்க வேண்டும்.

ரஜினி (தி.மு.க.): ரயில்வே தண்டவாளம் அருகில் குப்பைகள் கொட்டுவதை நிறுத்த வேண்டும்.

இவ்வாறு உறுப்பினர்கள் பேசினர்.

முடிவில், துணைத்தலைவர் சிவக்குமார் நன்றி கூறினார்.


Next Story