அம்மா உணவகத்தில் நகர சபை தலைவர் ஆய்வு
சீர்காழி அம்மா உணவகத்தில் நகர சபை தலைவர் ஆய்வு
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புதிய பஸ் நிலைய வளாகத்தில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில் சீர்காழி நகர சபை தலைவர் துர்கா ராஜசேகரன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அம்மா உணவக சமையல் கூடத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள அறிவுறுத்தினார். மேலும் தேவையான அடிப்படை வசதிகள் குறித்து பணியாளர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் தேர் கீழ வீதி, வசந்தம் நகர், தேர் தெற்கு வீதி உள்ளிட்ட பகுதிகளில் புதிதாக அமைக்கப்பட்ட தார்ச்சாலை பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 16-வது வார்டுக்கு உட்பட்ட மேட்டுத்தெரு பொதுமக்கள் சாலை அமைத்து தர வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் அங்கு புதிதாக தார்ச்சாலை அமைப்பதற்கான திட்ட மதிப்பீட்டினை தயார் செய்து தரும்படி பணி மேற்பார்வையாளர் விஜயேந்திரனிடம் தயார் செய்து தருமாறு கேட்டுக் கொண்டார். ஆய்வின் போது துணைத் தலைவர் சுப்பராயன், நகரசபை உறுப்பினர்கள் வள்ளி மாரிமுத்து, பாஸ்கரன், தேவதாஸ், தி.மு.க. வார்டு செயலாளர்கள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர். கோவில் பத்து பகுதியில் குளம் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியினை நகர சபை தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.