புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய அரசு ஊழியர்கள் வேண்டுகோள்


புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய அரசு ஊழியர்கள் வேண்டுகோள்
x

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய அரசு ஊழியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 16-வது ஆண்டு பேரவை கூட்டம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்தது. இதற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் குமரிஅனந்தன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் வருகிற 7-ந்தேதி செங்கல்பட்டில் நடைபெறும் சங்கத்தின் மாநில பிரதிநிதித்துவ பேரவை கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து அதிகப்படியான உறுப்பினர்கள் கலந்து கொள்ள வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். மாநகராட்சி, நகராட்சிகளில் நிரந்தர பணியிடங்களை அழித்திடும் அரசாணை 152-ஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டும். நிறுத்தப்பட்ட சரண்டர் உள்ளிட்டவற்றை தமிழக அரசு உடனே வழங்க வேண்டும். முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலமாக செயல்படுத்திட வேண்டும். தொகுப்பூதியம் பெறும் அரசு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக மாற்றி வழங்கிட வேண்டும். அனைத்து ஒப்பந்த, வெளிமுகவை மற்றும் தினக்கூலி ஊழியர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1 More update

Next Story