சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்


சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்
x
தினத்தந்தி 9 Dec 2022 12:30 AM IST (Updated: 9 Dec 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon

வடமதுரை அருகே 100 நாள் வேலையை முறையாக வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்

வடமதுரை அருகே உள்ள சுந்தரபுரி பகுதியில், 100 நாள் வேலை திட்டத்தில் முறையாக பணி வழங்காமல் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை ஒதுக்குவதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் தங்களுக்கும் சமமான முறையில் பணி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலர் சுந்தரபுரியில் திண்டுக்கல்-குஜிலியம்பாறை சாலையில் அமர்ந்து திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த வடமதுரை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் பா.கொசவபட்டி ஊராட்சி செயலர் வெங்கடாசலத்திடம் அனைவருக்கும் சமமான முறையில் 100 நாள் வேலை பணிகளை வழங்க வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தினர். இதனையடுத்து மறியலை கைவிட்டு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மறியல் காரணமாக, அந்த சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.






Next Story