ராணுவ கட்டுப்பாட்டில் உள்ள மயான பூமியை ஒப்படைக்க கோரி பொதுமக்கள் மறியல்


ராணுவ கட்டுப்பாட்டில் உள்ள மயான பூமியை ஒப்படைக்க கோரி பொதுமக்கள் மறியல்
x

ராணுவ கட்டுப்பாட்டில் உள்ள மயான பூமியை ஒப்படைக்க கோரி பொதுமக்கள் மறியலில் ஈடுப்பட்டனர்.

சென்னை

சென்னையை அடுத்த மணப்பாக்கம் பிரதான சாலையில் ராணுவ இடத்தில் உள்ள மயான பூமியை அந்த பகுதி மக்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்தனர். ஒவ்வொரு முறையும் சடலங்களை கொண்டு செல்லும்போது ராணுவத்தினரிடம் அனுமதி பெருவதில் சிக்கல் நீடித்து வந்தது.

இந்த நிலையில் ராணுவ அதிகாரிகள் மற்றும் கிண்டி வருவாய் துறை கோட்டாட்சியர் சாய்வர்தனி, தாசில்தார் தியாகராஜன் ஆகியோர் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மயான பூமியை பார்வையிட வந்தனர். அப்போது பொதுமக்களுடன் 157-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் உஷாராணி பாண்டியன் அங்கு வந்து மணப்பாக்கம் பிரதான சாலையில் அமர்ந்து மயான பூமியை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என கோரி திடீரென மறியலில் ஈடுபட்டார். இனிவரும் காலங்களில் மாற்றுப்பாதையில் சடலங்களை எடுத்துச் செல்ல ஒப்புதல் அளிப்பதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்ததால் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.


Next Story