நேமம் ஏரியில் இருந்து திறந்துவிடப்பட்ட உபரிநீர் குடியிருப்புகளை சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதி


நேமம் ஏரியில் இருந்து திறந்துவிடப்பட்ட உபரிநீர் குடியிருப்புகளை சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதி
x

நேமம் ஏரியில் இருந்து திறந்துவிடப்பட்ட உபரி நீர் குடியிருப்புகளை சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதியுற்றனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு ஏரிகள் கனமழை காரணமாக நிரம்பி வருகிறது. பூந்தமல்லி அடுத்த நேமம் ஏரி முழுமையாக நிரம்பி உபரிநீர் வெளியேறி வருவதால் செம்பரம்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட சான்ட்ரோ சிட்டி பகுதியில் உள்ள 200-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. குறிப்பாக நேமம் ஏரியில் இருந்து வெளிவரும் உபரி நீர் செம்பரம்பாக்கம் ஏரிக்கு செல்லும் தற்போது பூந்தமல்லி - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள் நடப்பதாலும், செம்பரம்பாக்கம் அருகே உபரி நீர் செல்லும் பகுதியில் உள்ள பெரிய கால்வாய் விரிவு படுத்தப்பட்டு வருவதாலும் அந்த கால்வாயை தற்காலிகமாக அடைத்து வைத்துள்ளனர்.

இதனால் ஏரிக்கு செல்ல வேண்டிய உபரி நீர் குடியிருப்புகள் முழுவதும் சூழ்ந்து பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர். இங்கு தேங்கிய நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

1 More update

Next Story