திருவொற்றியூரில் மர்மவாயு கசிவால் பொதுமக்கள் அவதி: தொழிற்சாலையில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஆய்வு


திருவொற்றியூரில் மர்மவாயு கசிவால் பொதுமக்கள் அவதி: தொழிற்சாலையில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஆய்வு
x

திருவொற்றியூரில் மர்மவாயு கசிவால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதைத் தொடர்ந்து தொழிற்சாலையில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

சென்னை

சென்னை திருவொற்றியூர் மற்றும் மணலி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒருமாத காலமாக காற்றில் ஏற்பட்ட மர்ம வாயு கசிவால் பொதுமக்களுக்கு மூச்சு திணறல், சுவாச பிரச்சினைகள் ஏற்பட்டது.

இதனையடுத்து மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் திருவொற்றியூர் சுற்றுவட்டார பகுதிகளில் உயரமான குடியிருப்புகளில் 'தெர்மோ பாசினல் சாம்பிலர்' என்ற நவீன பொருத்தி, காற்றில் வாயு கலப்பு உள்ளதா? என பரிசோதித்து வருகின்றனர். இந்த நிலையில் வடசென்னை எம்.பி.கலாநிதி வீராசாமி, திருவொற்றியூர் எம்.எல்.ஏ. கே.பி.சங்கர், மாதவரம் எம்.எல்.ஏ. சுதர்சனம் திருவொற்றியூர் மண்டல குழு தலைவர். தி.மு.தனியரசு, மணலி மண்டல குழு தலைவர் ஏ.வி.ஆறுமுகம் உள்ளிட்ட குழுவினர் மணலி, மத்திய அரசு நிறுவனமான சி.பி.சி.எல்., நிறுவனத்தில் திடீர் ஆய்வு செய்தனர்.

அப்போது அங்கு பொதுமக்கள் நலன் கருதி வாயு கசிவு உள்ளதா? என கவனிக்கவும், முறையாக அவற்றை பராமரிக்கவும், குழு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டதாக தெரிவித்தனர்.


Next Story