பொதுமக்கள் போலீஸ் நிலையம் முன்பு காத்திருப்பு போராட்டம்


பொதுமக்கள் போலீஸ் நிலையம் முன்பு காத்திருப்பு போராட்டம்
x

கீரமங்கலம் பட்டவைய்யனார் கோவிலில் பால்குடம் எடுக்க தடை போட்டதால் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். பொதுமக்கள் போலீஸ் நிலையம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை

பால்குடம் எடுக்க தடை

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் பட்டவைய்யனார் மற்றும் பரிவார தெய்வங்களுக்கான கும்பாபிஷேகம் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நடந்தது. தற்போது வழிபாடுகள் செய்வதில் இருதரப்பினரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று ஒரு தரப்பினர் பால்குடம் எடுக்க அனுமதி கேட்டிருந்த நிலையில், மற்றொரு தரப்பினர் பால்குடம் எடுப்பது வழக்கமில்லை.

அதனால் பால்குடம் எடுக்க அனுமதிக்க கூடாது என்றதால் நேற்று முன்தினம் ஆலங்குடி தாசில்தார் அலுவலகத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் பால்குடம் எடுக்க தடை விதித்து உத்தரவிடப்பட்டது.

காத்திருப்பு போராட்டம்

இதனை தொடர்ந்து பட்டவைய்யனார் கோவிலில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று ஒரு தரப்பினர் திரண்டு கீரமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு சென்று எங்களுக்கு பால்குடம் எடுக்க அனுமதிக்காத நிலையில் கோட்டாட்சியரின் சமாதானக் கூட்டம் முடியும் வரை மற்றொரு தரப்பையும் கோவிலுக்குள் நுழைய அனுமதிக்க கூடாது.

கோவில் சாவிகளை போலீசார் வாங்க வேண்டும் என்று புகார் கொடுத்துவிட்டு போலீஸ் நிலையம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பரபரப்

சுமார் 2 மணி நேரம் காத்திருப்பிற்கு பிறகு ஆலங்குடி தாசில்தார் செந்தில்நாயகி, ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு தீபக் ரஜினி, கீரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் ஆகியோர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பேச்சுவார்த்தைக்கு பிறகு நாளை (அதாவது இன்று) மாலை ஆலங்குடி தாசில்தார் அலுவலகத்தில், புதுக்கோட்டை கோட்டாட்சியர் முருகேசன் தலைமையில் சமாதானக் கூட்டம் நடக்கிறது என்று கூறினர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். போலீஸ் நிலையம் முன்பு பொதுமக்கள் திரண்டிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story