அரசு பஸ்சை சிறைபிடித்த பொதுமக்கள்


அரசு பஸ்சை சிறைபிடித்த பொதுமக்கள்
x

குன்னம் அருகே அரசு பஸ்சை பொதுமக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பெரம்பலூர்

அரசு டவுன் பஸ்

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே குரும்பாபாளையம் கிராமம் கிராமத்திற்கு பெரம்பலூரில் இருந்து பேரளி, மருவத்தூர், குரும்பபாளையம், பனங்கூர், கல்பாடி வரை அரசு டவுன் பஸ் இயக்கப்படுகிறது. இந்த பஸ் தினமும் நாள் ஒன்றுக்கு 9 முறை இயக்கப்படுகிறது.

தற்போது பள்ளி, கல்லூரிகளில் தேர்வு முடிந்து விடுமுறை விடப்பட்டதால் அந்த டவுன் பஸ் காலை மற்றும் மாலை நேரங்களில் மட்டுமே இயக்கப்படுவதாகவும், மதிய நேரங்களில் 3 அல்லது 4 முறை பஸ் இயக்கப்படாமல் நிறுத்தி விடுவதாகவும், அல்லது குரும்பா பாளையம் கிராமத்திற்கு வராமல் மருவத்தூர் வழியாக திருப்பி சென்று விடுவதாகவும் கூறி பெரம்பலூர் அரசு போக்குவரத்து கிளை அலுவலகத்திற்கு பொதுமக்கள் புகார் தெரிவித்து உள்ளனர்.

சிறைபிடிப்பு

இந்தநிலையில் தற்போது குரும்பாபாளையம் கிராமத்தில் நடைபெறும் திருவிழாவிற்கு முறையாக பஸ் விடகோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் பொதுமக்கள் கோரிக்கை நிறைவேற்றாமல் நேற்று வழக்கம் போல் பஸ் சென்றுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மாலை நேரத்தில் வந்த அரசு டவுன் பஸ்சை பொது மக்கள் ஒன்று திரண்டு சிறைபிடித்தனர். இதையறிந்த பெரம்பலூர் அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளர் பொதுமக்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இன்று (திங்கட்கிழமை) முதல் அந்த பஸ் சரியாக இயக்கப்படும் என தெரிவித்ததின் பேரில் பொதுமக்கள் அந்த பஸ்சை விடுவித்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story