இரட்டிப்பு தொகை தருவதாக கூறி ரூ.28 லட்சம் மோசடி


இரட்டிப்பு தொகை தருவதாக கூறி ரூ.28 லட்சம் மோசடி
x
தினத்தந்தி 12 Jun 2023 2:15 AM IST (Updated: 12 Jun 2023 6:29 AM IST)
t-max-icont-min-icon

முதலீடு செய்யும் தொகைக்கு இரட்டிப்பு பணம் தருவதாக கூறி ரூ.28 லட்சம் மோசடி செய்த பெண் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர்


முதலீடு செய்யும் தொகைக்கு இரட்டிப்பு பணம் தருவதாக கூறி ரூ.28 லட்சம் மோசடி செய்த பெண் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இரட்டிப்பு தொகை

தஞ்சாவூர் பி.ஏ.ஒய்.நகரை சேர்ந்தவர் லதா (வயது 51). இவர் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கும் ஒண்டிப்புதூர் பகுதியை சேர்ந்த செல்வராணி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

அப்போது செல்வராணி, லதாவிடம் தான் பெரிய அளவில் முதலீட்டு வர்த்தகம் செய்து வருவதாகவும், ஏராளமான தொழில் அதிபர் பழக்கம் இருப்பதால் அவர்கள் முதலீட்டு தொகைக்கு கூடுதல் லாபம் கிடைப்பதாகவும், எனவே தன்னிடம் முதலீடு செய்தால் இரட்டிப்பு தொகை தருவதாகவும் கூறி உள்ளார்.

மேலும் ரூ.65 லட்சம் முதலீடு செய்தால், ரூ.1 கோடியே 30 லட்சம் லாப தொகையுடன் தருவதாக செல்வராணி கூறியுள்ளார். இதனை நம்பி லதா ரூ.65 லட்சம் கொடுத்துள்ளார்.

ரூ.28 லட்சம் மோசடி

ஆனால் செலுத்திய பணத்தையோ, லாப தொகையையோ திரும்ப கொடுக்கவில்லை. தொடர்ந்து வற்புறுத்திய பின்னர் ரூ.37 லட்சத்தை மட்டும் செல்வராணி திருப்பி கொடுத்துள்ளார். மீதமுள்ள ரூ.28 லட்சத்தை கொடுக்கவில்லை.

இதுதொடர்பாக சிங்காநல்லூர் போலீசில் லதா புகார் அளித்தார். இதன்பேரில் செல்வராணி மீது மோசடி உள்ளிட்ட சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஏற்கனவே செல்வராணி மீது மோசடி தொடர்பாக சில வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.


Next Story