திருவிழாவில் மோதல் ; 6 பேர் காயம்


திருவிழாவில் மோதல் ; 6 பேர் காயம்
x
தினத்தந்தி 20 Jan 2023 12:15 AM IST (Updated: 20 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

வடக்கலூரில் திருவிழாவில் மோதல் ஏற்பட்டதால் 6 பேர் காயம்

கோயம்புத்தூர்


அன்னூர்

அன்னூர் அருகே வடக்கலூரில் ஊர் கட்டுப்பாட்டை மீறியதாக சில குடும்பங்கள் ஒதுக்கி வைக்கப்பட்டு உள்ளது. இது குறித்த புகாரின் பேரில் கோவை வடக்கு ஆர்.டி.ஓ. தலைமையில் விசார ணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக வடக்கலூரில் பொங்கல் திருவிழா நடைபெற்றது.

இதில் ஒதுக்கி வைக்கப்பட்ட குடும்பத்தை சேர்ந்த சிலருக்கும், எதிர் தரப்பினருக்கும் இடையே நேற்று மாலை வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது ஒதுக்கி வைக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் சரமாரியாக தாக்கப்பட்டனர். அவர்கள் அன்னூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இது குறித்த புகாரின் பேரில் அன்னூர் போலீசாரும், தமிழ்நாடு சிறப்பு காவல் படை போலீசாரும் வடக்கலூரில் குவிக்கப்பட்டு உள்ளனர்.


Next Story